- Tamil Jathagam
- Accurate report for predicting life potential.

நவகிரங்களில் முக்கிய கிரகமாக பாவிக்கப்படுபவர் சனி பகவான். ஒவ்வொரு ராசியிலும் நீண்டகாலம் சஞ்சரிக்கக்கூடிய கிரகம் சனிபகவான். சனைச்சரன் என்றும் மந்தன் என்றும் குறிப்பிடுவர்.ஜோதிடத்தில் சனி பகவான் நீதிக்கான கிரகமாக பாவிக்கப்படுகிறார்.மேலும் சனி பகவானே ஆயுள்கரகனாகவும், கர்மக்காரகனாகவும் அழைக்கப்படுகிறார்.
எல்லாவிதமான கர்மகாரியங்களுக்கும் பொறுப்பு வகிக்கக்கூடியவர் சனி ஆவார். ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் சனி அமைந்துள்ள இடம், அவரின் பார்வை பெரும் இடங்கள், அவரின் ராசி மற்றும் நட்சத்திரத்தை பொருத்தே ஜாதகர் சுப பலன்களை அனுபவிப்பாரா அல்லது அசுப பலன்களை அனுபவிப்பாரா என்று அறியமுடியும்.
கர்மக்காரகனான சனி ஜென்ம ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தும் சுபர்களின் பார்வையை பெற்றாலும் ஜாதகருக்கு சுப பலன்களை தனது தசா புத்தி காலங்களில் வாரிவழங்குவர். அதுவே சனி பகவான் பாதிக்கப்பட்ட நிலையில் ஜென்ம ஜாதகத்தில் இருந்தால் ஜாதகருக்கு எதிலும் தோல்விகள், வாழ்வில் போராட்டங்கள், அசிங்கங்கள், அவமானங்கள், ஆயுளுக்கும் கண்டம் போன்ற அசுப பலன்களை அனுபவிக்க செய்துவிடுவார்.
ராசி மண்டலத்தில் மகர ரசிக்கும் கும்ப ரசிக்கும் அதிபதி ஆவார் சனி. இதில் கும்பம் சனி மூலதிரிகோணம் அடையும் ராசியாகும். துலாம் ராசியில் உச்சம் எனும் நிலை அடைவர். மேஷத்தில் நிச்சம் எனும் பலம் இழக்கும் நிலை அடைவர்.
சனி பகவான் மேற்கு திசையில் வலுவடைவார்.ஜோதிடத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் சனிக்கு சத்ருக்கள் ஆவார்கள். குருவை சமமாக பாவிப்பார். புதன், சுக்ரன், ராகு, கேது சனி பகவானுக்கு நட்பு கிரகங்கள்.சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார்.
ராசி மண்டலத்தில் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் பாவத்தை பார்க்கும் திறன் பெற்றவர். பூசம், அனுஷம், உத்திரட்டாதி சனி பகவானின் நட்சத்திரங்கள் ஆகும். எமதர்மன் இவரின் அதிதேவதை ஆவார். காகம் சனியின் வாகனம் ஆகும்.சனி தசா நடத்தக்கூடிய காலம் மொத்தம் பத்தொன்பது ஆண்டுகள்.
எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும். ஒரு மனிதரின் ஆயுளை அறிந்து கொள்வதற்கும், மரணம் எவ்வாறு நிகழும் எப்போது நிகழும் என்பதை அறிந்து கொள்ளக்கூடிய பாவம்.
மேலும் எட்டாம் பாவம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம், நஷ்டம்,போராட்டங்கள், அசிங்கம், அவமானங்கள், விபத்துக்கள்,திருடு போவது தனி மனித ரகசியங்கள், உடலின் மறைவு ஸ்தனங்கள், அறுவை சிகிச்சை, தலைமறைவு வாழ்க்கை, சிறைப்படுத்தல்,குற்ற செயல்களில் ஈடுபடுவது திடீர் அதிர்ஷ்டங்கள், திடீர் பணவரவு, ஆயுள் காப்பீடு, வாழ்க்கைதுணையின் பொருளாதார நிலை, பங்கு சந்தையில் திடீர் பணவரவு, புதையல் யோகம் ஏற்படுவது, ஆராய்ச்சியில் ஈடுபடுவது அதில் வெற்றியும் பெறுவது, வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய யோகம் உண்டாவது போன்ற கலப்பு பலன்களை பிரதிபலிப்பது எட்டாம் பாவம் ஆகும்.
எட்டாம் பாவத்தில் சுபர்கள் பலம் பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஆயுள் தீர்க்கம் உண்டாகும், திடீர் பண வரவு வெளிநாட்டு யோகம் ஏற்படுவது, பங்குசந்தையில் அதிர்ஷ்டம் ஏற்படுவது போன்ற சுப பலன்கள் உண்டாகி வாழ்வை சிறப்பாகும்.அதுவே பாவர்கள் இருந்தாலோ எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தாலோ வாழ்வில் கஷ்டங்களும், பொருளாதார சிக்கல்களும், ஆயுள் குறைபாடும் விபத்து கண்டங்கள் ஏற்படுவது போன்ற அசுப பலன்களை ஏற்படுத்திவிடும்.
ஆயுளுக்கு கரக கிரகமான சனி பகவான் ஜென்ம ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமான எட்டாம் பாவத்தில் அமரும்போது ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கம் உண்டாகும். அதே சமயம் எட்டாம் பாவத்தில் சனி இருந்தால் தடைகள், விபத்துகள், காயங்கள், நிதி இழப்புகள், போராட்டங்கள் போன்ற சவால்கள் நிறைந்த வாழ்க்கையை ஜாதகருக்கு ஏற்படுத்திவிடுகிறார்.
இதனால் ஜாதகரின் மனோதிடம் குறைவது, தன்னபிக்கை இல்லாமல் போவது சூழ்நிலைகளை சமாளிக்க முடியாமல் ஜாதகரை துன்பத்தில் ஆழ்த்திவிடும். ஜாதகருக்கு வரக்கூடிய வாழ்க்கைதுணை ஏழ்மை நிலையில் இருக்கக்கூடும். ஜாதகர் எடுக்கக்கூடிய முன்னேற்றத்திற்கான முயற்சிகள் அனைத்திலும் தோல்வியையும், பண விரயத்தையும் ஏற்படுத்திவிடும்.
வேலையில் நிலை இல்லாத தன்மையை உருவாகும். தனக்கு கீழ் வேலை செய்வோரின் சூழ்ச்சிக்கு ஜாதகர் ஆளாகப்படுவார். சொந்த தொழில் செய்தால் நஷ்டமும் மனஉளைச்சலும் ஜாதகருக்கு ஏற்படும். உறவுகளால் ஜாதகர் கைவிடப்படுவார்.வாழ்க்கையில் அடிக்கடி நம்பிக்கை துரோகங்கள் சந்திக்கும் நிலை உண்டாகும். எட்டாம் பாவத்தில் அமரக்கூடிய சனியால் ஜாதகருக்கு நாள்பட்ட நோயினால் பாதிப்புகள் ஏற்படும்.
பிள்ளைகளால் அதிருப்தியை சந்திக்கும் நிலை வாழ்வில் உண்டாகும்.எட்டாம் பாவத்தில் சனி அமர்ந்து இளமை காலத்தில் சனி திசையை கடக்கவேண்டிய சூழல் ஏற்ப்பட்டால் ஜாதகருக்கு கல்வியில் தடைகள் ஏற்படுவது, திருமணம் தாமதமாவது, வேலை கிடைக்காமல் போவதோ அல்லது வேலையில் பிரச்சனை ஏற்ப்பட்டு பொருளாதார இறக்கங்களை சந்திக்ககூடிய நிலை உருவாகும்.
மேலும் எட்டாம் பாவத்தில் அமரும் சனிக்கு பாவர்களின் இணைவு உண்டானால் ஜாதகரிடம் நேர்மை இல்லாமல் போகும். வாக்கில் சுத்தம் இல்லாமல் போகும் போய் கூறுபவராக ஜாதகர் இருப்பார். மேலும் விபத்து கண்டங்கள் ஏற்பட்டு ஆயுள் குறைபாடுகளையும், அதை தொடர்ந்த அச்சத்தையும் ஏற்படுத்தும். அதுவே எட்டாம் பாவத்தில் அமரும் சனிக்கு சுபர்களின் இணைவு கிடைக்கும் பட்சத்தில் ஜாதகருக்கு உழைப்பால் முன்னேற்றம் ஏற்படுவது, வெளியூர், வெளிநாடு சென்று வாழ்வில் முன்னேற்றம் காண்பது போன்ற சுப பலன்களை உண்டாகும்.
ஜெனன ஜாதகத்தில் மேஷம் லக்கினமாக அமைந்து எட்டாம் பாவமான விருட்சகத்தில் சனி அமர்ந்தால் ஜாதகருக்கு வேலையில் திருப்தி இல்லாத நிலை உண்டாகும். தொழிலில் அடிக்கடி மாற்றங்களையும் நஷ்டத்தையும் சந்திக்கும் நிலை ஏற்படும். ஜாதகர் கடுமையான பொருளாதார பின்னடைவை வாழ்வில் சந்திப்பார். ஆயுள் சம்மந்தப்பட்ட அச்சம் இருந்துகொண்டே இருக்கும். அடிக்கடி விபத்து கண்டங்களை சந்திக்கும் நிலையம் ஏற்படும் கடமையை செய்வதில் தடைகளை சந்திப்பார்.
ஜெனன ஜாதகத்தில் ரிஷப லக்கினமாக அமைந்து எட்டாம் பாவமான தனுசுயில் சனி அமர்ந்தால் ஜாதகருக்கு உயர் கல்வியில் தடைகள் ஏற்படும். தகப்பனாரை விட்டு பிரியும் சூழல் ஏற்படுவது அல்லது தகப்பனாரின் வழிகாட்டுதல் இல்லாமல் போவது என்றாகும். வேலைக்காக வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் ஜாதகருக்கு ஏற்படும்.
ஜெனன ஜாதகத்தில் மிதுன லக்கினமாக அமைந்து எட்டாம் பாவமான மகரத்தில் சனி அமர்ந்தால் ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கம் உண்டாகும். இங்கு சனி ஆட்சி எனும் பலம் பெறுவார். எனவே ஜாதகர் தன் உழைப்பால் உயரும் வாய்ப்புகளை உருவாக்குவார். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் ஜாதகருக்கு ஏற்படும். ஜாதகர் ஆராய்ச்சி சம்மந்தப்பட்ட துறையில் படித்து முன்னேறும் வாய்ப்புகள் ஏற்படும்.
ஜெனன ஜாதகத்தில் கடக லக்கினமாக அமைந்து எட்டாம் பாவமான கும்பத்தில் சனி அமர்ந்தால் ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கம் உண்டாகும். இங்கு சனி ஆட்சி மற்றும் மூலதிரிகோண வலு அடைவார்.ஜாதகர் வாழ்வில் அடிக்கடி மாற்றங்களை சந்திக்கும் சூழல் ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படும். சமுதாயத்தில் பார்த்து பழக்கும் மக்களால் அதிருப்திகளை சந்திப்பார்.வாழ்வில் அடிக்கடி விரக்தியான மனோநிலையை அடைவார்.
ஜெனன ஜாதகத்தில் சிம்ம லக்கினமாக அமைந்து எட்டாம் பாவமான மீனத்தில் சனி அமர்ந்தால் ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கம் உண்டு. ஆயினும் ஜாதகர் நோயினால் அவதிப்படும் சூழல் ஏற்படும். நிலை இல்லாத வேலை தன்மையை ஏற்படுத்தும். இல்லையென்றால் ஜாதகருக்கு வெளியூர் வெளிநாடு சென்று பணி புரியும் வாய்ப்புகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.
ஜெனன ஜாதகத்தில் கன்னி லக்கினமாக அமைந்து எட்டாம் பாவமான மேஷத்தில் சனி அமர்ந்தால் ஜாதகருக்கு ஆயுள் சம்மந்தப்பட்ட பயத்தை உண்டாகும். ஏனென்றால் சனி இங்கு நீச்சம் எனும் நிலையை அடைவார். ஆயுள் காரகனாகிய சனி பலம் இழப்பதால் ஜாதகருக்கு ஆயுள் குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.
ஜாதகர் காதல் தோல்வி சந்திப்பார். பூர்விக சொத்துகள் இல்லாமல் போவது அல்லது பூர்விக சொத்துகளால் நஷ்டம் அடைவது, புத்திர பாக்கியம் தாமதம் ஆவது, கல்வியில் தடைகள் ஏற்படுவது நோயினால் பாதிப்பு அடைவது போன்ற அசுப பலன்களை ஜாதகருக்கு உண்டாக்கும்.
ஜெனன ஜாதகத்தில் துலாம் லக்கினமாக அமைந்து எட்டாம் பாவமான ரிஷபத்தில் சனி அமர்ந்தால் ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வெளியூர் வெளிநாடு சென்று முன்னேறும் வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாரா திடீர் பண வரவு உண்டாகும். உழைப்பால் முன்னேற்றம் காணக்கூடியவராக ஜாதகர் இருப்பார்.
ஜெனன ஜாதகத்தில் விருட்சிக லக்கினமாக அமைந்து எட்டாம் பாவமான மிதுனத்தில் சனி அமர்ந்தால் ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கம் உண்டாகும். ஆயினும் வாழ்வில் மிகுந்த போராட்டங்கள் தோல்விகளை சந்திக்கும் நிலை ஏற்படும். தவறான சகவாசங்கள் ஏற்பட்டு அதனால் நஷ்டத்தையும் அவமனைகளையும் சந்திக்க நேரிடும். சொத்துகள் அமைத்து கொள்வதில் தடைகள், வில்லங்கங்கள் ஏற்படும். தாயாரை விட்டு பிரியும் சூழல் ஏற்படும். இட மாற்றங்களை சந்திக்க நேரிடும்.
ஜெனன ஜாதகத்தில் தனுசு லக்கினமாக அமைந்து எட்டாம் பாவமான கடகத்தில் சனி அமர்ந்தால் ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கம் உண்டாகும். ஆயினும் வாழ்வில் மிகுந்த போராட்டங்கள் தோல்விகளை சந்திக்கும் நிலை ஏற்படும். குடும்பத்தார்களின் ஒத்துழைப்பு இல்லாமல் போகும். சம்பாதிப்பதில் தடைகள் ஏற்படும். பேச்சு திறன் குறைத்தவராக ஜாதகர் இருப்பார் அல்லது போய்யை அதிகம் பேசுபவராக இருப்பார்.
தவறான தொடர்புகள் ஏற்படும் சூழல் உண்டாகும். சம்பாதிப்பதற்க்காக வெளியூர் வெளிநாடு செல்ல நேரிடும்.
ஜெனன ஜாதகத்தில் மகர லக்கினமாக அமைந்து எட்டாம் பாவமான சிம்மத்தில் சனி அமர்ந்தால் ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கம் உண்டாகும். ஆயினும் ஜாதகருக்கு தன்நம்பிக்கை குறைபாடுகள் ஏற்படும். வாழ்வில் நிலை இல்லாத தன்மையை ஏற்படுத்தும்.குடும்பத்தார்களின் ஒத்துழைப்பு இல்லாமல் போகும். சம்பாதிப்பதில் தடைகள் ஏற்படும். வாழ்வில் ஏற்ற இரக்கங்களை சந்திக்க நேரிடும். ஜாதகருக்கு தாழ்வுமனப்பான்மையை உண்டாகும்.
ஜெனன ஜாதகத்தில் கும்ப லக்கினமாக அமைந்து எட்டாம் பாவமான கன்னியில் சனி அமர்ந்தால் ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கம் உண்டாகும். ஜாதகர் தன் கடின உழைப்பால் வாழ்வில் முன்னேற்றம் அடையும் நிலை உண்டாகும். சேவை மனப்பான்மை கொண்டவராக ஜாதகர் இருப்பார். வாழ்வில் மாற்றங்களை சந்தித்து கொண்டே இருப்பார். வெளியூர் வெளிநாடு சென்று முன்னேறும் வாய்ப்புகள் ஏற்படும்.
ஜெனன ஜாதகத்தில் மீன லக்கினமாக அமைந்து எட்டாம் பாவமான துலாமில் சனி அமர்ந்தால் ஜாதகருக்கு பூர்ண ஆயுள் உண்டாகும், ஏனென்றால் சனி இங்கு உச்சம் எனும் பலம் அடைவார். இருந்தும் ஜாதகர் வாழ்நாளில் மிகுந்த கஷ்டங்களையும் போராட்டங்களையும் சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் அடிக்கடி பொருளாதார பின்னடைவுகளை சந்திக்கும் சூழல் ஏற்படும். தூக்கம் கெடும், பிரயாணங்களில் அலைச்சல் உண்டாகும். விபத்து கண்டங்களை சந்திக்க நேரிடும். தண விஷயங்களில் தவறான முடிவு எடுத்து நஷ்டப் படும் சூழல் ஏற்படும். வெளியூர் வெளிநாடு சென்று வேலை செய்யும் நிலை உண்டாகும்.
Recent Post
Categories