- Tamil Jathagam
- Accurate report for predicting life potential.

பங்கு சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது என்பது இன்றைய காலகட்டத்தில் படித்த மக்களிடம் பொதுவாக பரவி கிடைக்கும் மனப்பான்மையாகும். ஒரு காலத்தில் நன்கு படித்த உயர்தட்டு மக்கள் மட்டுமே பங்கு சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால் இன்றோ நடுத்தரவர்க்கத்தினரும் பங்கு சந்தையின் விதிமுறைகளை அறிந்து அதில் முதலீடு செய்து லாபம் காணும் வகையில் காலம் மாறியுள்ளது. ஆனால் அதே சமயம் இதில் மிகப்பெரிய நஷ்டம் தோல்வி காண்பவர்களும் உண்டு. ஜோதிட முறைப்படி பங்கு சந்தையில் யாருக்கு லாபம் ஏற்படும் யாருக்கு நஷ்டம் ஏற்படும் என்பதை அறியலாம்.
பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஜோதிடம் எவ்வாறு நமக்கு உதவும் என்பதையும், உங்கள் ஜாதகம் பங்கு சந்தையில் லாபம் ஈட்டும் வகையில் உள்ளதா என்று பார்ப்போம்.
மிதுனாதிபதி புதன் பங்கு வர்த்தகத்தின் முதன்மை காரகராகிறார். பாத்திரங்களுக்கும் அறிவுக்கும் புதன் காரணமாக விளங்குகிறது. ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் புதன் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தால் அந்த ஜாதகர் சரியான நேரத்தில் சரியான பங்குகளில் முதலீடு செய்து மிக பெரிய லாபம் பெறுவார்.
ராகுபிரமாண்டம் மற்றும் கண்ணுக்கு தெரியாத செயலுக்கு ராகுவே காரணமாகிறார். அறிவை பயன்படுத்தி தனக்கு நேரடியாக தொடர்பு இல்லாத பிற நபரின் வணிகத்தில் ஆவணத்தை அடிப்படையாக கொண்டு வாங்கி அல்லது விற்கும் தொழில் பங்கு சந்தை. ராகு புதன் தொடர்பு இன்றி பங்கு சந்தை வணிகம் இல்லை.ஜெனன ஜாதகத்தில் ராகு லக்கணத்திலோ, லக்கினாதிபதியுடனோ, 5ஆம் அதிபதியுடனோ அல்லது 10ஆம் அதிபதியுடனோ தொடர்பு கொண்டால் ஜாதகர் பங்கு சந்தையில் மிக பெரிய லாபம் காண்பார்.
குருஇயற்க்கை சுபர் மற்றும் இயற்க்கை தன காரகரான குரு பகவான் பங்கு சந்தையில் அதிர்ஷ்டத்தை பிரதிபலிக்கும் கிரகமாகும். ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குரு பகவான் 11ஆம் பாவமான லாப ஸ்தானத்தை தொடர்பு கொண்டிருந்தால் ஜாதகருக்கு பங்கு சந்தையில் நல்ல லாபம் ஏற்படும். குரு 11ஆம் பாவத்தோடு தொடர்பு இன்றி இருந்தால் ஜாதகருக்கு பங்கு சந்தையின் மூலம் ஏற்படும் லாபம் கர்மாவையும் கொண்டுவந்து சேர்க்கும். அதுவே குரு 11ஆம் பாவத்தோடு தொடர்பு கொண்டால் பங்கு சந்தையின் மூலம் ஏற்படும் லாபம் ஜாதகருக்கு திருப்தியை அளிக்கும்.
சந்திரன்மனோகாரகரான சந்திரன் ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் பலம் பொருந்திய நிலையில் இருந்தால் (ஆட்சி, உச்சம், வளர்பிறை சந்திரன்) ஜாதகர் பங்கு சந்தையில் தினமும் முதலீடு செய்து தினமும் லாபம் காண்பார். மேலும் மனோகாரகரான சந்திரன் வலுப்பெற்று இருப்பதால் ஜாதகர் தன் உள்ளுணர்வு மூலம் லாபம் தரும் பங்குகளில் சரியாக முதலீடு செய்து மிக பெரிய வெற்றி காண்பார்.
ரிஷப லக்கினம் மற்றும் ராசியில் பிறந்தவர்களுக்கு 2,5ஆம் பாவத்திற்கு பங்கு சந்தைக்கு கரக கிரகமான புதனே அதிபதி ஆகிறார், மேலும் 8,11ஆம் பாவத்திற்கு குரு அதிபதி ஆகிறார். சுபர்களான புதனும் குருவும் பங்கு சந்தையில் வெற்றி பெற உதவும் 2,5,8,11ஆம் பாவங்களுக்கு அதிபதிகளாக வருவதாலும் இவர்களுடன் ராகு தொடர்பு ஏற்படும் பட்சத்தில் பங்கு சந்தையில் னால லாபம் பெறுவார்கள்
மிதுனம்மிதுன லக்கினம் மற்றும் ராசியில் பிறந்தவர்களுக்கு 2ஆம் அதிபதியாக சந்திரன் வருவதால் பங்கு சந்தையில் தினசரி முதலீடு மூலம் தினமும் வருமானம் ஏற்படுத்திக்கொள்வார்கள். ஆயினும் தனகாரகரான குரு இவர்களுக்கு பாதகாதிபதி என்பதால் பொருளாதார விஷயங்களில் தவறான முடிவு எடுத்து நஷ்டம் அடையும் சுழலும் ஏற்படும். புதனின் வீடான மிதுனத்தை ராசி மற்றும் லக்கினமாக கொண்டவர்கள் நல்ல அறிவாற்றல் பெற்றிருப்பார்கள். ஆயினும் தன் அதீத தன்னம்பிக்கையால் தவறான முடிவுகள் எடுத்து பண இழப்பை சந்திப்பார்கள்.
சிம்மம் லக்கினம் மற்றும் ராசியில் பிறந்தவர்களுக்கு 2,11ஆம் அதிபதியாக புதன் வருவார், 5,8ஆம் அதிபதியாக குரு வருவார். பணபர ஸ்தனங்களான 2,5,8,11ஆம் பாவங்களுக்கு இயற்க்கை சுபர்களான புதனும், குருவும் வருவதால் இவர்கள் பங்கு சந்தையில் வெற்றிபெரும் யோகம் ஏற்படும். மேலும் 5ஆம் பாவம் பங்கு சந்தையை குறிக்கும், கால புருஷ தத்துவப்படி சிம்மம் 5ஆம் பாவம் என்பதாலும் சிம்ம ராசி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பங்கு சந்தையில் ஜெயிக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.
விருட்சகம்விருட்சிக லக்கினம் மற்றும் ராசியில் பிறந்தவர்களுக்கு 2,5ஆம் அதிபதியாக வருபவர் குரு பகவான், 8,11ஆம் அதிபதியாக வருவது புதன் பகவான். பண பர ஸ்தனங்களான 2,5,8,11ஆம் பாவங்களுக்கு அதிபதிகளாக வரக்கூடியவர்கள் இயற்க்கை சுபர்கள், மற்றும் பங்கு சந்தைக்கு கரக கிரகமான புதனும் தனகாரகரான குருவும் என்பதாலும் இந்த லக்கின ராசிக்காரர்களும் பங்கு சந்தையில் லாபம் பெறுவார்கள். மேலும் கால புருஷ தத்துவப்படி விருட்சகம் 8ஆம் பாவம் என்பதாலும் இவர்களுக்கு திடீர் பண வரவு பங்கு சந்தையின் மூலம் ஏற்படும்.
தனுசுதனுசு லக்கினம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் பங்கு சந்தை முதலீட்டில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். ஆயினும் பங்கு சந்தைக்கு கரக கிரகமான புதன் பாதகாதிபதி என்பதால் இவர்கள் பங்கு சந்தை முதலீடு செய்யும் பொது கவனத்துடன் இருப்பது அவசியம். பொதுவாக தனுசு லக்கினம் மற்றும் ராசிக்காரர்கள் திறமை வாய்ந்தவராக இருப்பார்கள். தன் முடிவுகளின் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் தவறான முடிவுகளை எடுத்து நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். மேலும் 5ஆம் அதிபதி செவ்வாய் 12ஆம் அதிபதி அவதாலும் 2ஆம் அதிபதி சனி என்பதிலும் இவர்களுக்கு பானு சந்தையில் திருப்தியான லாபம் ஏற்படாது.
மீனம்மீன லக்கினம் மற்றும் ராசியில் பிறந்தவர்களுக்கு 2ஆம் அதிபதி செவ்வாய் 9ஆம் பாவம் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதி என்பதிலும் 5ஆம் பாவதிபதி சந்திரன் என்பதாலும் இவர்கள் பங்கு சந்தையில் தினசரி லாபம் காண்பார்கள், பங்கு சந்தையில் வெற்றி பெரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும். ஆயினும் 11ஆம் அதிபதி சனியே 12ஆம் அதிபதியும் அவதால் ஏற்படும் லாபத்தை மீண்டும் முதலீடு செய்து நஷ்டம் அடையும் சுழலும் ஏற்படும், மேலும் பங்கு சந்தைக்கு கரக கிரகமான புதன் பாதகாதிபதி என்பதாலும் முதலீடுகளில் கவனமாக இருப்பது அவசியம்.
Recent Post
Categories